மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியரான டாக்டர். சுர்பியோ குமார் சாது, சுற்றுச்சூழல் மீதும் அதிக ஆர்வம் உடையவர் ஆவார். கடந்த 35 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதால், இவருக்கு பைக் ஓட்டத் தெரிந்தாலும், பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது சைக்கில் “பிளாஸ்டிக்கைக் கைவிடுங்கள்”, “மரங்களை நடவும்” மற்றும் “சுற்றுச்சூழலைக் காப்போம்” என்ற வாசகப் பலகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பதாகைகளை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு, “எனது சைக்கிளில் எழுதப்பட்டிருப்பதை மக்கள் சில சமயங்களில் நிறுத்தி படிக்கிறார்கள். அவற்றைப் படித்த பிறகு ஒருவர் மரம் நட்டால் அது எனக்கு மிகவும் திருப்திகரமான விஷயம்” என்று சாது கூறினார். மேலும் அவர் வாழும் வரை சுற்றுச்சூழலுக்கான தனது பணியைத் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.