பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சமரச தீர்வு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் எம்.சுனில் ராஜா, வக்கீல் சிவகுமார், அகமது அலி சமரசர், அண்ணாதுரை, குமார், சத்தியேந்திரன், வேல்முருகன், பாலையா, ரவி, மாரிமுத்து, பாண்டியன், சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கோடிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சட்ட பணிகள் குழு தலைவர் எம்.சுனில் ராஜா பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.