Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படியும் நடக்குமா… ஊராட்சி மன்ற தலைவர் பதவி… 1 ஓட்டில் வெற்றி பெற்ற கடல்மணி…!!

திருச்சி, சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல் மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.. இந்நிலையில் இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன..

இதில், திருச்சி சிறுமருதூர் ஊராட்சி தலைவர் இடைத் தேர்தலில் கடல்மணி என்பவர் 424 வாக்குகள் பெற்று 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. அதாவது, கன்னியம்மாள் என்பவர் 423 வாக்குகள் பெற்ற நிலையில், கடல்மணி ஊராட்சித் தலைவர் பதவியை தன் வசமாக்கி இருக்கிறார்..

 

Categories

Tech |