மூச்சுத்திணறி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்கர் பகுதியில் தொழிலாளர்கள் சிலர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் தற்போது நிலவி வரும் குளிரை சமாளிப்பதற்காக தங்களது அறைக்குள் நிலக்கரியை எரித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எரிந்ததால் ஏற்பட்ட வாய்வு அறை முழுவதும் பரவியுள்ளது. இதனால் அனைவரும் சுவாசிக்க முடியாமல் மயங்கி கிடந்துள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை அப்பகுதி மக்கள் அவர்களது வீட்டு கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் கதவு திறக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது தொழிலாளர்கள் அனைவரும் மயங்கி நிலையில் கிடந்துள்ளனர். அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.