மெக்சிகோவில் உள்ள அணை வறண்டு போய் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கிறார்களா என தேடி வருகின்றனர்.
மெக்சிகோவில் உள்ள சாண்டியாகோ நகரில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை தற்போது வரண்டு போய் காணப்படுகிறது. மேலும் சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்களது உறவினர்களின் உடல்கள் வரண்டு போன அந்த அணையில் புதைந்து இருக்கிறதா என தேடி வருகின்றனர். மேலும் அந்த அணை படுக்கையை மண்வெட்டியால் தோண்டி ஏதேனும் தென்படுகிறதா என தேடி வருகின்றனர். குறிப்பாக மெக்சிகோவில் இதுவரை 95,000 பேர் கடத்தப்பட்டு மாயமானதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.