Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியும் போதைப்பொருள் கடத்துறீங்களா…. வசமாக சிக்கிய நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியிலுள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு சென்ற 2013 ஆம் வருடம் மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 2 பார்சல்கள் வந்தது. அந்த பார்சல்களில் ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுப்புவது போல் முகவரி இடம் பெற்றிருந்தது. இதனிடையில் இந்த பார்சல்கள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் இது தொடர்பாக கூரியர் நிறுவனத்தினர் போதைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பார்சல்களை காவல்துறையினர் பிரித்து பார்த்தபோது அதில் இருந்த காலணியில் 82 கிராம் எடையுள்ள ஆம்பெடமைன் எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் விசாரணையில் மலேசியாவைச் சேர்ந்த வாசுதேவ விமல் கலியபெருமாள் என்பவர் இப்பார்சல்களை தஞ்சாவூர் முகவரியில் கூரியர் வாயிலாக மலேசியாவுக்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவரை பெங்களூருவில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்தனர். இவ்வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் என்.பி.குமார், ஏ.செல்லத்துரை போன்றோர் ஆஜராகினர். பின்  வழக்கை விசாரித்த நீதிபதி, வாசுதேவ விமல் கலியபெருமாள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 12 ஆண்டு சிறைதண்டனையும், ரூபாய் 2½ லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Categories

Tech |