இரவு நேரத்தில் தீப்பந்தத்தை வைத்து கொண்டு சிறுவர்கள் ஆற்றில் மீன்பிடித்து செல்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மூல வைகை ஆற்றில் தற்போது குறைவான அளவில் நீர்வரத்து உள்ளது. இந்த ஆற்றல் சிறிய அளவிலான மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கொசு வலைகளை பயன்படுத்தி பொதுமக்கள் சிறிய மீன்களை பிடித்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் இரவு நேரத்தில் தீப்பந்தம் வைத்தும், டயர்களில் தீ பற்ற வைத்தும் அதன் வெளிச்சத்தில் மீன்களை பிடித்து செல்கின்றனர். இரவு நேரத்தில் மீன்கள் வெளிச்சத்தை நோக்கி வேகமாக வருகின்றன. அப்போது மீன்களை சிறுவர்கள் தங்கள் கைகளால் பிடித்து விடுகின்றனர். அதன் பிறகு மாணவர்கள் பிடிபட்ட மீன்களை 1 கிலோவிற்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.