மூட நம்பிக்கையின் காரணமாக ஒரு இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தில் 45 வயதுள்ள ஒரு இளம் பெண்ணை பலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவமானது மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சேர்ந்த மாண்ட்வி என்ற கிராமத்தில் அரங்கேறியுள்ளது.
அந்த பெண்ணின் தீய பார்வை காரணமாக உறவினர்கள் புதிய நோயால் பாதிக்கப்பட்டார்கள் என கூறி அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி முடியை பிடித்து இழுத்து பலர் முன்னிலையில் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.