Categories
தேசிய செய்திகள்

இப்படியெல்லாம் கூடவா பண்றது… “நாப்கினுக்குள் போதை பொருள் கடத்தல்”… வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் உண்மை…!!!

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் பெண் ஒருவர் தனது நாப்கின்கள் போதை பொருளை மறைத்து கடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை விருந்து நடைபெறுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு போதை பொருட்களை பயன்படுத்திய 8 பேரை கைது செய்தனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஒருவர் ஆவார். மும்பையில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் மனுக்களையும் மும்பை எஸ்ப்லனேடு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ஆர்யன் கான் மூன்று முறை ஜாமீன் கோரியும் ஜாமின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதனால் சனி மற்றும் ஞாயிறு அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட 18 பேர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கூடுதலாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாப்கினுக்குள் போதை பொருளை மறைத்து வைத்து கப்பலுக்குள் வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Categories

Tech |