Categories
உலக செய்திகள்

“இப்படியே போனால் கடும் விளைவு ஏற்படும்!”.. பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை..!!

பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் பஸ்கால் கிரெப்பே வரும் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் கொரோனா தொற்றில் தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. எனினும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. எனவே கொரனோ பரவல் குறைந்திருப்பதால் உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது.

இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரான பஸ்கால் கிரெப்பே இது குறித்து கூறியுள்ளதாவது, தற்போதுள்ள நிலைமை பிரான்சில் நீடித்தால் வரும் ஜூன் மாதத்தில் நாட்டின் நிலைமை மோசமடையும். அரசு முதலில் உணவகங்களின் வெளிப்பகுதி, அதன் பின்பு உட்புறங்களை திறக்க இருக்கிறது.  இதனால் மக்கள் முகக்கவசமின்றி உணவகங்களுக்கு சென்று வருவதால் கடும் விளைவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |