சென்னை வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலையில் குமரேசன்(55) என்பவர் வசித்துவருகிறார். இவர் மனைவி இறந்து விட்டார். இவருக்கு காஞ்சனா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்கள், குணசேகரன் என்ற மகன் உள்ளார். யமுனா மற்றும் பரிமளா திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். குமரேசன் கணவரை இழந்த மூத்த மகள் காஞ்சனாவுடன் சொந்தமான வீட்டில் இரண்டாம் தளத்தில் வசித்து வருகிறார். குணசேகரன் மனைவி குழந்தையுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று காஞ்சனா அருகிலுள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றார். அதன் பிறகு வீட்டிற்கு வந்து போது, தந்தை குமரேசனை காணவில்லை. குணசேகரிடம் கேட்டபோது, அவரும் தந்தையை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
உடனே காஞ்சனா வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது குணசேகர மாயமானார். இதனையடுத்து போலீசார் வீட்டின் சிசிடிவி ஆய்வு செய்தபோது குணசேகரன் நீலநிற கலரில் தண்ணீர் ஊற்றும் பெரிய பேரலுடன் இறங்கி வந்து, அதை லோடு வேனில் வைத்து புறப்படும் காட்சி பதிவாகி இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே போலீசார் குமரேசன் அறைக்குச் சென்று பார்த்தபோது அறை முழுவதும் ரத்தக் கறை இருந்தது. குமரேசன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் பகுதிக்கு குணசேகரன் சென்றது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் தீவிர விசாரணையின் போது, அந்த பேரலை மண்ணில் புதைத்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் பேரலை தோண்டி எடுத்து பார்த்தபோது குமரேசன் சடலமாக கிடந்தார். தந்தையைக் கொன்று பேரலில் அடைத்து வைத்து அவரை புதைத்துள்ளார். அதனை தொடர்ந்து கொல்லப்பட்ட குமரேசன் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவருக்கு சொந்தமான வீடுகளுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரையில் வாடகை வருகிறது. ஓய்வூதியம் மற்றும் வாடகை பணத்தை யமுனா, பரிமளா, காஞ்சனா என மூன்று பேருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்து வருகிறார். இவ்வளவு பணம் இருந்தும், நான் எலக்ட்ரீசியன் வேலை செய்ய வேண்டும் என குமரேசனிடம் தகராறில் ஈடுபட்டு சொத்தை பிரித்து கேட்டுள்ளார். ஆனால் குமரேசன் தர மறுத்ததால் அவரை கொன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள குமரேசனை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு அதிகம் செல்வார் என்பதால் தனிப்படை அனைத்து கோவில்களிலும் தேடியனார்கள். ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். நேற்று குணசேகரன் மொட்டு அடித்தபடி பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.