Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படிலாம் தடை விதிக்காதிங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வாரசந்தை நடத்துவதற்கு அனுமதி தருமாறு வியாபாரிகள் பேரூராட்சியின் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளைய பேரூராட்சியில் வாரம்தோறும் சந்தை நடைபெறும். இதற்கிடையே அத்தொகுதியில் கொரோனாவின் பாதிப்பு 18 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்திலிருந்து மறு அறிவிப்பு அறிவிக்கும் வரை வாரச்சந்தை நடத்துவதற்கு பொதுமக்களின் நலனை கருதி தடை விதித்தது. இதனை எதிர்த்து வாரச் சந்தைகளின் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பேரூராட்சியின் செயல் அலுவலரான திருமலைக்குமார் வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்பின் வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாரச்சந்தை நடத்த அனுமதிக்க கோரி மனு கொடுத்தனர். அதனை ஏற்ற கலெக்டர் சந்தை நடத்த அனுமதி அளித்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |