திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி ஊரடங்கு கட்டுபாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று அதிகாரிகள் பலரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பழனி பகுதியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி கொரோனா விதிகள் பின்பற்றுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி பேருந்து நிலையம் பகுதியில் முககவசம் அணியாமல் சென்று கொண்டிருந்தவர்களை பிடித்து கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் பேருந்துகளை மறித்து பார்வையிட்ட அவர் இருக்கைகளை தவிர்த்து நின்று கொண்டு பயணிக்கும் படி ஆட்களை ஏற்றி செல்ல கூடாது என்றும், பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.