Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படிலாம் மாஸ்க் அணியக்கூடாது…. தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால்  தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முக்கியமாக கருதப்படும் முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்பதற்காக வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதை முறையாக  அணிவது மிகவும் அவசியம். இதை  பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் நடிகர்கள் பலர் எப்படியெல்லாம் மாஸ்க் அணிய கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |