Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிடுச்சே … 2ம் இடத்தில் இந்தியா…. அதிர்ச்சியில் மத்திய அரசு….!!

நேற்றைய கொரோனா உயிரிழப்பில் இந்தியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  66 லட்சம் 42ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்டு அல்லோலப்படும் நாடாக அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 50,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 30,40,833ஆக உள்ளது. புதிதாக 378 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,32,979ஆக உள்ளது.

கொரோனாவின் கோர பிடியில் இந்தியாவும் தப்பவில்லை கடந்த 4 மாதங்களாக ”எப்போது குறையும் இந்த கொரோனா” என்று மக்கள் புலம்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இந்தியா உலகளவில் 3ஆம் இடத்தில் உள்ளது. நேற்று 22,510 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 7,20,346ஆக உள்ளது. நேற்று மட்டும் 474 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்தம் 20,174 பேர் உயிரிழந்து இருக்கின்றார்கள்.

நேற்று மட்டும் 15,259 பேர் தொற்றில் இருந்து மீண்டதால் இதுவரை 4,40,150 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,60,022 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 8,944 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். நேற்று மட்டும் அதிகமான உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வரிசையில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது மத்திய அரசையும், மக்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

நேற்று மட்டும் உயிரிழப்பு:

பிரேசில் – 656

இந்தியா – 474

அமெரிக்கா – 378

மெக்ஸிகோ – 273

பெரு – 183

இரான் – 160

கொலம்பியா – 146

ரஷ்யா – 135

சவுத் ஆப்பிரிக்கா – 111

ஈராக் – 94

Categories

Tech |