இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. முதன்முறையாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இதன்படி ஒரு லட்சத்து மூன்றாயிரத்தி ஐநூற்றி ஐம்பத்தி எட்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐம்பத்தி இரண்டாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஏழு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு நானூற்றி எழுபத்தி எட்டு பேர் உயிர் இழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை எட்டு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி வரும் 8ஆம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
அப்போது கொரோனா தடுப்பூசி சார்ந்த விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு . ஹர்ஷ்வர்தன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழ்நாடு உட்பட பதினோரு மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே பிரதம திறன் நரேந்திர மோதிக்கு டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், புதிதாக கொரோனா தடுப்பூசி மையம் அமைப்பதற்கான நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தித் தருவதோடு , அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் வயது வரம்பில் மாற்றம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் .