யோகா குரு பாபா ராம்தேவ் யானை மீது ஏறி யோகா செய்யும் போது கீழே தவறி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் மதுரையில் இருக்கின்ற ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யோகா செய்து காட்டியுள்ளார். அப்போது யானை மீது ஏறி யோகா செய்யும்போது, யானை அசைந்ததால் பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்தார். அதனை கண்டவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கீழே விழுந்தவுடன் சுதாகரித்து எழுந்த ராம்தேவ், விறுவிறுவென நடந்து சென்றுள்ளார். இருந்தாலும் அவருக்கும் முதுகுத்தண்டில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.
அந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கு பலரும் கேலி கிண்டல் செய்தும் விமர்சனம் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இதனைப் போலவே கடந்த ஆகஸ்ட் மாதம் சைக்கிளில் சென்றபோது பாபா ராம்தேவ் தவறிக் கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.