Categories
அரசியல்

இப்படி எல்லாம் யார் காலிலும் விழக்கூடாது…? இது தப்பு.. சிறுமியிடம் சுயமரியாதை பாடம் எடுத்த கனிமொழி எம்.பி…!!!!

சென்னையில் திமுகவின் 15ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் திமு கவின் தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவின் துணை பொது செயலாளர் ஒருவராக கனிமொழி எம்பி யை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இதனை அடுத்து கனிமொழியை நேற்று பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு துறையினர் அவரை நேரில் சந்தித்து புதிய பதவிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளனர் சிலர் பொன்னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிலும் முக்கியமாக பெண்கள் பலர் கனிமொழியை வந்து சந்தித்துள்ளனர் கனிமொழிக்கு பொதுவாக பெண் நிர்வாகிகள் ஆதரவு அதிகம் இருக்கின்றது. இதனால் பலர் மாலையில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் இதனால் நேற்று மாலைக்கு பின் கனிமொழி மிகவும் பிஸியாகவே இருந்துள்ளார். இந்த சூழலில் தான் நிர்வாகி ஒருவர் தனது பெண் குழந்தையுடன் வந்து கனிமொழியை சந்தித்துள்ளார் அப்போது கனிமொழி காலில் அந்த பெண் குழந்தை விழுந்துள்ளது. இதை பார்த்ததும் கனிமொழி சற்றென்று கோபம் அடைந்துள்ளார் என்னம்மா இது என்ன பழக்கம் இது எதுக்கு குழந்தை எல்லாம் காலில் விழுகிறார்கள்.

இது ரொம்ப தப்பு என கோபம் அடைந்துள்ளார் மிகவும் உரிமையுடன் அந்த பெண்ணிடம் கனிமொழி கோபம் கொண்டுள்ளார். அதன் பின் அந்த சிறுமியை இப்படி எல்லாம் யார் காலிலும் விழக்கூடாது இந்த பழக்கம் எல்லாம் இருக்கவே கூடாது என்று கன்னத்தை பிடித்து அறிவுரை கூறியுள்ளார். அதன் பின் அந்த சிறுமியின் தாயாரும் யார் காலிலும் விழக்கூடாது என தெரிவித்துள்ளார். சிறுமிக்கு இந்த வயதிலேயே கனிமொழி சுயமரியாதை பாடம் இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

Categories

Tech |