இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் தினசரி வாழ்க்கையில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் ஒரு கிலோ அரிசி 300 ரூபாய், ஒரு லிட்டர் பெட்ரோலில் 300 ரூபாய், ஒரு லிட்டர் டீசல் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இலங்கை ரூபாயில் 275, ஒரு முட்டையின் விலை 40 ரூபாய். இந்த விலை உயர்வை பொருட்படுத்த முடியாத மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இதனால் நாடே போராட்ட களமாக காட்சியளிக்கிறது.
Categories