Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு ஆந்தையா..! ஹாட் வடிவத்தில் முகம்…. வியந்து பார்த்த மக்கள்..!!

வேளாங்கண்ணி அருகில் இதய வடிவ முகம் கொண்ட ஒரு அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகில் காமேஸ்வரம் தாண்டவமூர்த்திகாடு பகுதியிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் கால்நடைகள் உள்ளே வராமல் இருப்பதற்காக சுற்றிலும் வேலிவலை போடப்பட்டிருந்தது. இந்த வலைக்குள் இதய வடிவம்  முகம் கொண்ட ஒரு ஆந்தை சிக்கி இருந்தது. இதை பார்த்த வியந்த அக்கம்பக்கத்தினர்  அந்த ஆந்தையை  வலையில் இருந்து மீட்டனர். இதுகுறித்து அவர்கள்  நாகை வனத்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஆந்தையை பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு விட்டு சென்றனர்.

Categories

Tech |