ஒருவர் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலக நாடுகளில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது ஓமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இதனை அந்நாட்டு அரசு பதிவு செய்யவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனாவால் தினம் தோறும் 5 ஆயிரம் பேர் உயிரிழந்து வருவதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் வசிக்கும் ஒருவர் உணவகத்திற்கு சாப்பிட செல்லும்போது பெரிய கொக்கு வடிவத்தில் காகிதத்தால் உருவாக்கப்பட்ட முக கவசத்தை அணிந்துள்ளார். பின்னர் அவர் சாப்பிடும் போதெல்லாம் முகமூடி ஒரு கொக்கு வாய்போல் திறக்கிறது. அதன் பின்னர் அவர் சாப்பிடுகிறார். இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.