Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கணவரா?… மனமுடைந்த மனைவி தற்கொலை… சிக்கிய 18 பக்க கடிதம்… அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் போதை மருந்து அளித்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு கணவர் அழைத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் காட்டிலோடியா  பகுதியில் சுதந்திரப் ஹிதேந்திரபடேல் , ( 47 )ஹர்ஷா (42 )இரு தம்பதியினரும் வசித்து வந்தார்கள் . ஹிதேந்திரபடேல்  மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஆண்டு இவர் 2020தில் ஆகஸ்ட் மாதம் திருமணம் ஆனது. அது திருமண தகவல் மையம் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஹர்ஷா அவரது வீட்டிற்கு வெளியே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து  போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு ஹர்ஷா வின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடனடியாக  அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு ஷெர்ஷாவின் வீட்டை சோதனை செய்தனர். அப்பொழுது ஹர்ஷாவின் அறையில் ஒருகடிதம் கிடைத்தது. அக்கடிதத்தில் 18 பக்கங்கள் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் ஹர்ஷா எனது கணவர் என்னை பாலியல் உறவுக்காக மட்டுமே திருமணம் செய்து கொண்டார் எனவும்அதன்பிறகு இயற்கைக்கு மாறாக என்னை கட்டாயப்படுத்தி போதைப் பொருளைக் கொடுத்து மயக்க நிலையில் பாலியல் உறவு கொள்கிறார்  எனவுன் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் எனது மாமியாரும் எனது கணவரும் என்னை மிகவும் துன்புறுத்த ஆரம்பித்தார்கள் . பிறகு எனது குடும்பத்தினரிடம் சென்று வரதட்சனை வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தினர். எனது குடும்ப சூழ்நிலை அறிந்ததால் நான் அவர்களிடம் வரதட்சனை கேட்காமல் மறுத்தேன் . இந்த சூழ்நிலையில் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றாததால்  ஆத்திரமடைந்து  என்னை மிகவும் அவமானப்படுத்தினர்.

அதுமட்டுமன்றி என்னை அடித்தும் உதைத்தும் துன்புறுத்தினார்கள் எனவும் அக்கடிதத்தில் எழுதி இருக்கிறார். இதை அறிந்த போலீசார் ஹிதேந்திரா   அவரது தந்தை மனு படேல் (71) ,அவரது தாய் சுபத்ரா படேல்(69)மூவரையும் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முடிவை எடுத்த ஹர்ஷா தனது கணவர் ஹிதேந்திரன் அவரது மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த பின்னரே எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

Categories

Tech |