ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஷாலு தேவி (32), பாண்டு ராஜு (36) என்பவருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது எஸ்யூவி மோதியதில் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்து என கருதி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஷாலுவின் மரணத்திற்கு பிறகு அவரின் கணவர் மகேஷ் சந்திரா ரூ.1.90 கோடி காப்பீட்டு தொகையை பெறுவார் என்பதை அறிந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் பாண்டு ராஜூவின் நண்பர் மகேஷ் மற்றும் பிரபல கூலிப்படையை சேர்ந்த முகேஷ் ரத்தோரிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து கொலை செய்ய கூறியுள்ளார். இதனை போலீசார் கண்டறிந்த நிலையில் 5.50 லட்சம் முதல் தவணை ஆக செலுத்தப்பட்டதாக dcp தெரிவித்தார். இந்த கூட்டு சதியில் ஈடுபட்டார் நாகேஷ் குமார், சோனு சிங் ஆகியோருடன் மகேஷ் சந்திரா, ரத்தோட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.