Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சைக்கிளா….! பாராட்டிய ஆனந்த் மகேந்திரா…. ஆச்சரியமான சம்பவம்…!!!!

சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும் புதிய வகை பேட்டரி சைக்கிளை நபரொருவர் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.

ஆனந்த் மகேந்திரா என்பவர்  ஓர் இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மும்பையை தளமாகக் கொண்ட மகேந்திரா குழுமம் என்ற வணிக நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவர் ஒரு நபர் தாம் கண்டுபிடித்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு,அவருக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அந்த நபர் கண்டுபிடித்த பேட்டரி சைக்கிளானது மணிக்கு 26 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

மேலும் சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும் மற்றும் கரடுமுரடான பாதையில் சென்று வரும் என்று விளக்கியுள்ளார். இந்த பேட்டரி சைக்கிளுக்கு 20 நிமிடம் சார்ஜ் செய்தால் 50 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏறும் வகையிலும் சைக்கிள் பெடலை மிதித்து கொண்டே இருந்தாலும் சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 40 கிலோ மீட்டர் தூரம் வரை போகலாம். மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பேட்டரி சைக்கிள் தண்ணீரில் விழுந்தாலும் பாதிக்கப்படாத வகையில் மற்றும் தீப்பிடிக்காத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நபருக்கு ஆனந்த் மகேந்திரா பாராட்டு தெரிவித்து உள்ள நிலையில் புதிய கண்டுபிடிப்புகளை முதலீடு செய்வதில்  ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |