Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு தாயா?… நஞ்சுக் கொடியை சமைத்து சாப்பிட்ட விசித்திர தாய்…!!!

தனது குழந்தையின் நஞ்சுக்கொடியை மருத்துவமனையில் கேட்டு வாங்கி தாயொருவர் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது நஞ்சுக்கொடி என்பது உருவாகத் தொடங்குகிறது. இது குழந்தைக்கு ஆக்சிஜன் மற்றும் பிற ஊட்டச் சத்துக்களை கொடுக்கிறது. மேலும் குழந்தையின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது. இதனை சமைத்து உண்ண நினைத்துள்ளார் ஒருதாய். கேம்பிரிட்ஜ்ஜை சேர்ந்த கேத்ரினா ஹில் என்பவர் தனக்கு குழந்தை பிறந்த பிறகு தனது குழந்தையின் நஞ்சுக்கொடியை மருத்துவமனையில் கேட்டு வாங்கியுள்ளார். அதன் பிறகு அதைக் கொண்டு பிரிட்டோ என்னும் உணவை அவர் சமைத்து உள்ளார்.

அவர் ஏற்கனவே இருவருக்கு தாயாக உள்ளார். அவர் தனது இரு குழந்தைகளின் நஞ்சு கொடியையும் உட்கொண்டதாக கூறியுள்ளார். அதாவது இதற்கு முன்பாக தனது முதல் குழந்தையின் நஞ்சுக்கொடியை சாப்பிட்டுள்ளார். தனது முதல் முயற்சியில் நஞ்சுக்கொடி குடமிளகாயை சேர்த்து சாப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இரண்டாவது முறை அதில் சீஸ், புளிப்பு மற்றும் க்ரீம் ஆகியவற்றை சேர்த்து உணவாக மாற்றியுள்ளார். உணவாக சமைக்கும் வரை இந்த நஞ்சுக்கொடியை ஒரே நிலையில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “நஞ்சுக்கொடி இணைப்பு பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நான் படித்துள்ளேன். அதனால் அவற்றை உண்ண நினைத்தேன். ஆனால் அவற்றை எங்கும் வாங்க முடியாது. அதை சாப்பிட்டவர்கள் குறித்து நான் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தேன். அப்போதுதான் சில விஷயங்களை புரிந்தேன். இது பிரசவத்திற்கு முன்பு ஏற்படும் மனச்சோர்வை குறைக்கிறது மற்றும் பிரசவத்திற்கு பிறகு பால் உற்பத்திக்கு உதவுகிறது. இன்னும் பல நன்மைகள் இதில் அடங்கியுள்ளன. எனவே அவற்றை சாப்பிட்டேன். அதனால் எனது இரு குழந்தைகளுக்கும் சரியான அளவு தாய்ப்பால் கொடுக்க முடிகிறது”என்று அவர் கூறியுள்ளார். நஞ்சிக் கொடியை ஒரு பெண் சாப்பிட்டு உள்ளார் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

Categories

Tech |