Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு நேர்த்திக்கடனா…. “சேறு பூசி செருப்பால் அடித்த உறவினர்கள்”…. திருவிழாவில் நடந்த வினோதம்..!!

அய்யலூர் அருகில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் உடலில் சேறு பூசி செருப்பால் அடித்தும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே  தீத்தாகிழவனூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில்   மாரியம்மன், பகவதி அம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்தக் கோவில்களில் ஒவ்வொரு வருடமும் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 27- ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி எடுத்தல், வீதிஉலா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

இந்த திருவிழாவின் நிறைவு நாளான கடந்த 28-ஆம் தேதி அன்று “சேத்தாண்டி வேடம்” என்ற வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர். அதில் நேத்திக்கடன் செலுத்துபவர்கள் முதலில் சாமியை வழிபட்டு விட்டு தங்களது உடலின் மேல் கரி,சேறு ஆகிவற்றை பூசிக்கொண்டு கோவிலின் முன்பாக அமர, உடைந்த மண் பானைகள் கொண்டுவரப்பட்டது.அதன்பின்  அதில் மாடுகளின் கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சோறு  கொண்டு வரப்பட்டு ஊற்றப்பட்டன.

அதன் பின்னர் செருப்பு, துடைப்பத்தால் பழைய சோற்றை தொட்டுக்கொண்டு அங்கு உட்காந்திருந்த பக்தர்கள் தலையில் அவர்களது உறவினர்கள் அடித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். அதன்பின் அவர்கள் ஊர்வலமாக சென்று கோவில் குளத்தில் நீராடி வந்தனர். இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது இதேபோல் நேர்த்திக்கடனை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறோம். கோடைகாலத்தில் சருமம் உஷ்ண நோய் ஏற்படாமல் இருக்க உடலில் சேறு பூசிக் கொள்கிறோம் என்றும், செருப்பு, துடைப்பம் கொண்டு அடிப்பதன் மூலம் சகிப்புத்தன்மை பெருகி சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ முடியும் என்பது ஐதீகம் என்று கூறினார்கள்.

Categories

Tech |