முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனுவும் அதுல்யாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ,ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் அவர்களுடைய தயாரிப்பில் , இயக்குநரான ஸ்ரீஜர் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “முருங்கைக்காய் சிப்ஸ்” . இப்படத்தில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க இருக்கின்றனர்.
கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா போன்றோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் . “ரொமாண்டிக்” மற்றும் “காமெடியாக ” இப்படம் உருவாக உள்ளது .புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் உள்ள முக்கியமான பாரம்பரியத்தில் உள்ள நிகழ்வுகளையும், சம்பிரதாயத்தையும் நகைச்சுவையாக எடுத்துள்ள படமே முருககிக்காய் சிப்ஸ் .