Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பெண்ணா..?” தினமும் சித்ரவதை… மகனுக்காக வேலைக்கு வந்த பெண்… 24 கிலோ எடையுடன் உயிரிழந்த சோகம்…!!

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை தினமும் சித்திரவதை செய்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன்(40). இவர் கடந்த 2015 ஆம் வருடத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார். அப்பெண் ஏழ்மையினால் தன் 3 வயது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலைக்கு சென்று இருக்கிறார்.

இந்நிலையில் திடீரென்று பியாங்நகாய்டான் வீட்டில் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உடற்கூறு ஆய்வு முடிவில் அந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.

மேலும் அவரின் உடல்முழுவதும் 31 காயவடுக்கள் மற்றும் 47 வெளிப்புற காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து காயத்ரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் பியாங்நகாய்டானை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது பியாங்நகாய்டானை வேலைக்கு சேர்த்து ஐந்து மாதங்களுக்குப் பின்பு காயத்ரி அவரை  கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.

மேலும் அவருக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு அடித்து உதைத்து தினந்தோறும் பல கொடுமைகள் செய்திருக்கிறார். இதனால் அந்தப் பெண் மூளையில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கிறார். மேலும் அந்த பெண் இறக்கும்போது உடல் எடை 24 கிலோ இருந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக காயத்ரியை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |