சென்னை ஆளுநர் மாளிகையிள் நேற்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற பிறகு தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி பதவி பிரமாணத்துடன் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கு அருகிலேயே புல்வெளியில் போட்டோ ஷூட்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதிக்கு காரில் வந்திறங்கிய உதயநிதி, திடீரென புல்வெளியில் ஓடினார். மூத்த அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் முன்கூட்டியே வந்துவிட்டதால் மரியாதை நிமித்தமாக ஓடிச்சென்று வணக்கம் வைத்தார் உதயநிதி.