ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை காண காசோலை தபால் மூலம் அனுப்பப்படுகிறது.
நமது தி.மு.க. கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாதம்தோறும் ஏழை எளிய மக்களுக்கு மறைந்த கலைஞர் அவர்களின் நிதி அமைப்பின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மாதம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக எட்டு பேருக்கு தலா 25 ஆயிரம் விதம் 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும் நிதி பெறுவோர் வெளி மாவட்டத்தில் இருந்து வருவதால் அவர்களுக்கு ஆகும் போக்குவரத்து செலவு குறைப்பதற்காக தபால் மூலம் வரவு காசோலையாக அனுப்பப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.