கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர்
மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா. இவர் கொரோனா தொற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பொதுமக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட ஒழுங்கை மனிதாபிமானத்துடன் காப்பாற்றி வந்தார். இதனால் தேனிக்கு அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று போஸ்டர் அடித்து நகராட்சி முழுவதும் ஒட்டியதோடு மட்டுமல்லாமல் மாநகர காவல் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.