இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியும். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டுடன் பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகும். பொதுமக்கள் தங்களது அவசர பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு வங்கியை நாடுவார்கள். அவர்களுக்கு வங்கிகளில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டை வைத்து நீங்கள் கடன் பெற முடியும்.
வங்கியில் கடன் வாங்க நினைப்பவர்கள் இன் அடையாளம், தொழில் மற்றும் சம்பளம், கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சரிபார்க்கப்படும். இதற்குப் பெயர் கேஒய்சி சரிபார்ப்பு. மேலும் இதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். தனிநபர் கடன் வழங்கக் கூடிய வங்கிகள் கேஒய்சி சரிபார்ப்பு முடித்த பிறகு கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதன் பிறகு ஓரிரு நாட்களில் கடன் கிடைத்து விடும். உங்களின் ஆதார் சரிபார்ப்பு க்கு பிறகு கைரேகை பதிவு மற்றும் நேரடி சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் உள்ளடங்கும்.
இவை அனைத்தையும் முடித்த பிறகு தான் வங்கிகள் உங்களுக்கு கடனை வழங்கும். எனவே கடன் பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களில் ஆதார் கார்டு முக்கியமாக பயன்படுத்தப் படுவதால் அதனை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்களின் ஆதார் குறித்த விவரங்களை வேறு யாரிடமும் வழங்கக் கூடாது. ஒருவருடைய ஆதார் கார்டை வைத்து மற்றொருவர் கடன் வாங்கி ஏமாற்றும் வாய்ப்பை இதில் அதிகம் உள்ளது. எனவே அனைவரும் ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.