Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு விசித்திர மனிதரா…. ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே…. என்ன ஒரு ஆச்சரியம்?….!!!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த தைசுகே ஹோரி(36), ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேசன் தலைவராக உள்ளார். இவர் கடந்த 12 வருடங்களாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உறங்குகிறார். அதனால் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளார். நேரத்தை எப்படி குறைப்பது என்பது பற்றி நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இது குறித்து பேசிய அவர், அனைவரையும் போல நானும் 8 மணி நேரம் தூங்கி கொண்டு இருந்தேன். அதனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்க தொடங்கினேன்.கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாக கூட தூங்குவேன். அதனால் உடல் ரீதியாக எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |