லாமியாவில் ஒரு விசித்திரமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலை முதலில் மருத்துவமனையாக பயன்படுத்தினார்கள். அதன்பிறகு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அந்த சிறையில் இருக்கும் கைதிகள் பலர் இறந்துள்ளர். இதனையடுத்து சிறைச்சாலை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டது. இது ஹோட்டல் போன்று இருக்காமல் ஒரு போலியான சிறைச்சாலை போன்றே இருக்கும். அதாவது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு கைதிகள் போன்று நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்தான் வழங்கப்படும்.
அந்த ஓட்டலில் தங்க விரும்பினால் ஒரு சிறையில் ஒரு கைதி எப்படி நடத்தப்படுகிறாரோ அதேபோன்று தான் நடத்தப்படுவார்கள். இந்நிலையில் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும். இந்த ஹோட்டலுக்கு வருவதற்கு முன்பாக அவர்களிடம் நீங்கள் கைதிகள் போன்ற இருப்பதற்கு சம்மதமா என கேட்டு ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி விடுவர். மேலும் தவறு செய்யாமல் சிறைச்சாலை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அந்த ஹோட்டலுக்கு சொல்லலாம்.