இந்த உலகம் பல ரகசியகங்களால் நிறைந்துள்ளது. பல இடங்களில் ரகசிய நிறைந்த பல இடங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் நார்வே நாட்டின்S pitsbergen என்ற தீவில் இருக்கும் மலையில் உள்ள ‘Seeds Vault’ என்ற பகுதி. இதனை தமிழில் நாம் கூற வேண்டும் என்றால் மரம், செடி, கொடிகள் இவற்றின் விதைகளை பாதுகாத்து வைத்திருக்க கூடிய ஒரு இடம். இது நார்வே நாட்டில் உள்ளது. நார்வே ஐரோப்பாவில் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடாகும். இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது. இந்நாடு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல், மேற்கே நோர்வே கடல், தெற்கே வட கடல் என்பவற்றையும், சுவீடன், பின்லாந்து, இரசியா என்பவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.
இந்த நார்வே நாட்டின் Spitsbergen என்ற தீவில் உள்ள மலையில் உலகில் உள்ள 9,30,000 வகையான விதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியின் பெயர் தான் Seeds Vault. இதனை ஏன் சீக்ரெட் ப்ளேஸ் அதாவது ரகசிய அறை என்று கூறுகிறார்கள் என்றால், சாதாரணமாக அந்த இடத்திற்கு யாராலும் செல்ல முடியாது. அப்படி செல்வதற்கு வழி கிடையாது. பிறகு அந்த இடத்தில் எப்படி இவ்வளவு பெரிய ரகசிய அறையை உருவாக்கியுள்ளார்கள் என்றால், இதனை முழுக்க முழுக்க மலையை குடைந்து உருவாக்கியுள்ளார்கள்.
இந்த இடத்திற்கு நாம் செல்ல வேண்டுமென்றால் கூட தனி விமானத்தின் மூலமாக அல்லது ஹெலிகாப்டர் மூலமாக மட்டும் தான் செல்ல முடியும். இதிலும் கூட சாதாரணமான மனிதர்கள் செல்ல முடியாது, சிறப்பு அதிகாரிகள் மட்டுமே இதில் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் இதில் பல லட்சம் விதைகளை பாதுகாத்து வைக்க முடியும். இன்றைய தேதியில் மொத்தம் 9,30,000 வகையான விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. வருங்காலத்தில் ஏற்படும் பேரிடர்களால் நிலப்பரப்புகள் பாதிக்கப்பட்டாலும், நாம் காலம் காலமாக பாதுகாத்து வந்த இயற்கை பாரம்பரிய விதைகள் மறைந்து போகக் கூடாது என்பதற்காக இப்படி நாட்டு விதைகளை பாதுகாப்பதற்கு ரகசிய அறை அமைத்து வைத்துள்ளது நார்வே நாடு.