மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு வாழும் முஸ்லிம் பெண்களை குறி வைத்து கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆண்களைப் போல ஆடை அணிந்தாலும் திருமணத்திற்கு புறம்பாக கர்ப்பம் தரித்தாலும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். கசையடி மற்றும் அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த புதிய சட்டங்கள் கருத்து சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற உரிமைகளை அளிக்கும் என்று அனைத்து மகளிர் சங்கம் மற்றும் பிற மனித உரிமைகள் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் இந்த புதிய சட்டம் முஸ்லிம்களுக்கு அதிக நன்மைகளை தரும் என அரசு தெரிவித்துள்ளது.