பெங்களூருவில் பணத்திற்காக கணவரை கடத்தி 40 லட்சம் ரூபாய் அபகரிக்க முயற்சி செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் வசித்துவரும் சோமசுந்தரம் என்பவர் அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சுப்ரியா என்ற மனைவி உள்ளார். இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். அவரின் மனைவி பண ஆசை காரணமாக ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி தனது கணவரை நாலு பேர் கொண்ட கும்பலின் உதவியுடன் கடத்தி வைத்துள்ளார். அதன் பிறகு 40 லட்சம் ரூபாயை அபகரிக்க முயற்சி செய்துள்ளார். நீண்ட நாட்கள் அவரை வெளியே காணாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், சோமசுந்தரம் எங்கே என்று கேட்டனர்.
அதற்கு சுப்ரியா அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் தனிமையில் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அவரின் நாடகத்தை அறிந்த உறவினர்கள் சந்தேகம் அடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சுப்ரியா உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் கடத்தி வைக்கப்பட்டிருந்த சோமசுந்தரத்தை பாதுகாப்பாக மீட்டனர். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.