ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வரும் ஒருவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் 18 வயது இளம் பெண் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண் தந்து கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அந்த பகுதிக்கு வந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் சிறுவனை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத அந்த சிறுவன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.இதனை தடுக்க அந்த பெண் முயற்சி செய்த நிலையில் ஆத்திரம் அடைந்த சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை கத்தியால் குத்தி அங்கிருந்த கல்லை எடுத்து அந்த இளம் பெண்ணை கடுமையாக தாக்கி அங்கிருந்து தப்பிவிட்டான். அப்போது இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து அந்த பெண் அழைத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.