சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் கிரெட்டாவின் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தலைநகரான டெல்லியில் 80 நாட்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியாக விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடைபெற்றது. இதனால் அங்கு கலவரம் தொடங்கியது.இந்நிலையில் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டம் குறித்து டுவிட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அதன் பிறகு இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் என்பவர் விவசாயிகளின் போராட்டத்திற்கு வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். இதனால் சர்வதேச அளவில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் க்ரெட்டாவின் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து கிரெட்டா துன்பெர்க் ரயில் பெட்டி ஒன்றில் அமர்ந்து உணவு உண்பது போலவும் வெளியே ஏழை குழந்தைகள் உணவுக்கு ஏங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியுள்ளது. இது தொடர்பாக கிரெட்டா துன்பெர்க் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் ட்விட்டர் பயனாளர் சிங் தோமர் என்பவர் தனியார் தொலைக்காட்சி ஆசிரியருக்கு இந்தப் சர்ச்சை புகைப்படத்தை பகிர்ந்து நன்றி கூறுகிறார். மேலும்,#AskGreataWhy எனும் ஹாஷ்டேக் பிரபலமாகியது.இது குறித்து சர்வதேச மின்னணு ஆங்கில செய்தி ஊடகம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உண்மை தன்மைகளை ஆராய்ந்து அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அதன்பிறகு அப்புகைப்படத்தில் க்ரெட்டா அடர் மரங்கள் நிறைந்த பின்னணியில் உணவு உண்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த உண்மை புகைப்படத்தை மறைத்து ஏழை குழந்தைகளின் புகைப்படத்தை எடிட் செய்து போடப்பட்டுள்ளது. இக்குழந்தைகளின் புகைப்படமானது 2007 ஆகஸ்டில் ஆப்பிரிக்காவில் நடந்த போரின்போது புலம்பெயர்ந்த குழந்தைகளின் புகைப்படம் என தனியார் செய்தி ஊடகம் கூறியது. இந்நிலையில் இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இந்த வைரலான புகைப்படம் எடிட் செய்யப்பட்டு உள்ளது என ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.