Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி கூடவா பண்ணுவாங்க?…. இறந்தவரின் பெயரில் கொரோனா நிவாரண நிதி…. வசமாக சிக்கிய ரேஷன் கடை ஊழியர்….!!!

திருவட்டார் அருகில் உள்ள குட்டைக்காடு கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார்.இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்க்கிறார். இவரது தாயார் செல்லப்பூ, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி காலமானார்.செல்லப்பூவின் ரேஷன் கார்டில் அவரின் மகள் சசிகலாவின் செல்போன் நம்பரை கொடுத்திருந்தனர். இந்நிலையில் செல்லப்பூவின் குடும்பத்தினர்கள் அவர் இறந்தில் இருந்து நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கச் செல்லவில்லை .ஆனாலும் சசிகலாவின் செல்போன் எண்ணுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கியதாக செல்போனுக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து சசிகலா ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டபோது தவறுதலாக வந்தது என்று சொல்லி சமாளித்தார். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன் தமிழக அரசு வழங்கிய கொரோனா நிவாரண நிதி ரூ.4000 பெறப்பட்டதாக செல்போனை தகவல் வந்ததாக மறுபடியும் கடை ஊழியரிடம் சென்று கேட்டதற்கு தவறுதலாக வந்துவிட்டது என்று கூறினார். இந்நிலையில் திருவட்டார் வட்ட வழங்கல் அதிகாரி குமார் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று இறந்தவர்கள் பெயரில் நிவாரண நிதி எப்படி வாங்குவீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜகுமார் பணம், பொருட்கள் எதுவும் வாங்கவில்லை தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

அந்த விசாரணையின் போது தான் ரேஷன் கடை ஊழியர் செறுகோல் முறையை பயன்படுத்தி கைரேகை இல்லாமல் இறந்த செல்லப்பூவின் பெயரில் ரூ.4000 நிவாரண நிதி மோசடி செய்துள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஊழியருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து திருவட்டார் வட்ட வழங்கல் அலுவலர் குமார் கூறியது, ரேஷன் கார்டில் பெயர் இருந்தவர் இறந்துவிட்டால் அவர் பெயரை நீக்க வேண்டும் மற்றும் ஒரு நபர் கார்டு என்றால் அந்தக் கார்டை வட்ட வழங்கல் அலுவலகம் சென்று ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |