தனது கணவனை அனைத்து வகையிலும் கவனித்து திருப்தி படுத்த மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி, தன் கணவனை கவனித்துக்கொள்வதற்கும், அவரை திருப்திப்படுத்தவும், என்டெர்டெயின் செய்யவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.
அதில், தனது கணவனை அனைத்து வகையிலும் திருப்திப்படுத்துவதற்கு மூன்று பெண்கள் தேவை. அந்தப் பெண்கள் அழகாகவும் இளமையாகவும் படித்தவர்களாகவும் இருக்க வேண்டும்.அந்தப் பெண்களுக்கும் தனக்கும் எவ்வித சண்டையும் வராது என்றும் உறுதி அளித்துள்ளார்.உடலளவில் கணவரை திருப்தி செய்ய முடியாததால் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.