Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படி கூட ஏமாற்றுவார்களா… மகனிடம் வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டியிடம் 16 1/2 பவுன் நகை மற்றும் 1  1/2 லட்சம் போண்டவற்றை மோசடி செய்த மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள லாலா பேட்டை பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு தனபால் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் சசிகுமார் என்பவர் அரவக்குறிச்சியில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சசிகுமார் மற்றும் சசிகுமாரின் நண்பரான வேலவேந்தன்  இருவரும் செல்லம்மாளிடம் 1  1/2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 16 1/2 பவுன் தங்க நகை கடனாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளனர். இதனையடுத்து எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் செல்லம்மாள் உயிரிழந்து விட்டார்.

இதனால் செல்லம்மாளின் மகனான  தனபால் சசிகுமாரிடம் தனது தாயார்  கொடுத்த பணம் மற்றும் நகையை கேட்டுள்ளார். ஆனால் சசிகுமார் அதனை தர மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது தான் இவர் தனது தாயிடம் நகை மற்றும் பணத்தை மோசடி செய்துள்ள சம்பவம் தனபாலுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனபால் மின்வாரிய ஊழியரான சசிகுமார் மற்றும் வேலவேந்தன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சசிகுமாருக்கு உடைந்தையாக இருந்த வேலவேந்தன், அவரின் மனைவி ராஜலட்சுமி மற்றும் விஜயநிர்மலா போன்றோரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |