திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீராவி வைத்தியம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு நீராவி வைத்தியம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல்லா, இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைக்காரன் ஆகியோரும் நீராவி வைத்தியம் செய்து கொண்டனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.