பேராசை கொண்ட அணில் திருடுவதைத் தடுக்க ஒரு தந்திரமான பறவை காதலர் செய்த புத்திசாலித்தனமான திட்டம் இது.
நாம் அனைவரும் வீட்டில் கிளி , புறா , கோழி , ஆடு , மாடு என இவற்றில் ஒன்றையோ அல்ல அனைத்தையுமோ வளர்த்திருப்போம். இவற்றுக்கு என்ன தேவையோ புல் , அரிசி என உண்ணுவதற்கு வைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்போம். நாம் வைக்கும் புல்லாக இருந்தாலும் , அரிசியாக இருந்தாலும் அது மற்ற விலங்கு , பறவைகளுக்கு போய் சேருகின்றது. நாம் அதை கண்டு கொள்வதில்லை. ஆனால் தன்னுடைய பறவைக்கு வைக்கும் அரசியை அணில் உண்ணுவதை தடுக்கும் வகையில் ஒரு பறவை காதலர் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம்ஷையரில் வசிக்கும் ஒருவர் தனது தோட்டத்தில் பறவை வளர்த்து வந்தார். பறவைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள இவர் பறவையின் காதலராக மாறினார். தன்னுடைய பறவைக்கு வைக்கும் உணவு , அரிசியை ஒரு அணில் உண்பதை கவனித்த அவர் அந்த அணிலை தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சியில் அணில் பாடாத பாடு பட்டு சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது.
அந்த வீடியோவில் அணில் பறவைக்கு வைத்த உணவை உண்பதற்கு கூண்டுக்கு ஏறும் போது அது வழுகி கீழே செல்லும் படி நல்லா எண்ணையை தேய்த்து வைத்துள்ளார். இதனால் அணில் ஏறி விட்டு வழுக்கி கீழே வந்து விடுகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.