Categories
மாநில செய்திகள்

“இப்படி செய்தால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்”…? உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என உயர்நீதிமன்ற மதுரைகிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாந்த் அமர்வு வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது மனித கழிவுகளை மனதனே அகற்றுவதற்கு 2013லயே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு தடை இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் மனிதக் கழிவுகளை மனிதனை எடுக்கும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மனித கழிவுகளை இயந்திரங்கள் கொண்டு ரோபோட் முறையில் அள்ளுவதற்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் மனிதக் கழிவுகளை மனிதன் அல்ல தடை விதித்த உத்தரவை செயல்படுத்திய ஆவணங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |