மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சித்தலாப்பட்டி பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுந்தர்ராஜனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து சுந்தர்ராஜன் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுந்தர்ராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.