மதுரையிலுள்ள 2 கிராமத்திலிருக்கும் பொதுமக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அப்பகுதி மக்கள் மிகவும் ஆர்வமுடன் அவரவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியிலிருக்கும் உலைப்பட்டி மற்றும் குன்னூர்பட்டியில் சுமார் 1,168 வாக்காளர்கள் உள்ளனர்.
இக்கிராம மக்கள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை ஏற்று எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியிலிருக்கும் குறிப்பிட்ட சமூக மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் விதமாக வாக்களிக்க மறுத்துள்ளனர்.