மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்திலிருந்து 2000 ஆக குறைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மின்சார வாரியத்தின் சார்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோரிடம் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. 5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர் ஆன்லைன் மூலமாகவும், மற்ற நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்வாரிய அலுவலகங்களின் பணி சுமையை குறைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோரால் மூலமாக கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் என்பது 5000 இல் இருந்து 2000 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைக்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் மின்துறை அலுவலகங்களில் இந்த முடிவு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.