விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கிராம மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திலிருந்து அழகப்பர் சிலை வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை நிர்வாக மேலாளர் செந்தமிழ்செல்வம் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், மருத்துவர் அருள்தாஸ், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுஷல் யோஜனா திட்டத்தில் கீழ் பயிலும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.