Categories
சினிமா தமிழ் சினிமா

‘இப்படி தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம்’… தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுந்தர் சி… குஷ்பு வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்சி க்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது . இதையடுத்து அவர் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் சுந்தர் சி யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார் .

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் சுந்தர் சி தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் சுந்தர் சி ஒரு நாற்காலியில் உட்கார்ந்து மொபைல் போனை பார்த்துக் கொண்டிருக்க சில அடிகள் தூரத்தில் உட்கார்ந்திருக்கும் குஷ்பூ சுந்தர்சியை பார்த்துக் கொண்டு இருக்கிறார். மேலும் அதில்  ‘சில நாட்களாக ஒருவரை ஒருவர் இப்படி தான் பார்த்துக் கொள்கிறோம். அவர் வீட்டிற்குள் வருவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |